இந்தியா

இன்றைய கல்விமுறை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதாக இல்லை – இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர்

இன்றைய கல்விமுறை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதாக இல்லை என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப நிலை வகுப்புகளான LKG, UKG குழந்தைகளுக்கு மெய்நிகர் கற்றல் முறையில் (Virtual learning) பாடங்களைக் கற்பிப்பதை ’இன்பினிட்டி லெர்னிங்’ என்கிற கல்விக் குழு தொடங்கியுள்ளது. இதை முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்சியில் உரையாற்றிய அவர், தற்போதைய கல்விமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது கட்டாயம் இது மாணவ மாணவிகளுக்கு ஏற்றவாறு இல்லை என்று தெரிவித்தார்.

புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வதற்கான வாய்ப்பை தற்போது இருக்கும் கல்விமுறை உருவாக்கித் தரவில்லை என்று தெரிவித்துள்ளார். புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்வது தொடக்கத்தில் நமக்குக் கடுமையாக இருந்தாலும், சளைக்காமல் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது உரையின்போது மாதவன் நாயர் தெரிவித்தார்.