ஒரே நாடு – ஒரே ரேஷன் திட்டம் நாளை தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர்
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
மத்திய அரசு அறிவித்த இந்த திட்டத்துக்கான பணிகள் கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்தன. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் அண்மையில் இந்த திட்டம் சோதனை முறையில் துவங்கப்பட்டது. இதில் எந்த சிக்கலும் எழவில்லை.
இதனையடுத்து , அனைத்து மாவட்ட ரேஷன் கடை நிர்வாகிகள், மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் மக்கள் தங்கள் குடும்ப அட்டையை பயன்படுத்தி அருகிலுள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .