டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்…
கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
2020 ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளார்.
ராஜஸ்தான் அணி கடந்த இரு ஆட்டங்களில் விளையாடிய சாா்ஜா மைதானம் சிறிய மைதானம் ஆகும். அதேநேரத்தில் துபாய் மைதானம் பெரியது என்பதால் அந்த அணியால் கடந்த இரு ஆட்டங்களைப் போல் பெரிய அளவில் ரன் குவிக்க முடியுமா என்பது சற்று சந்தேகம் அளிக்கிறது .
இதுவரை இந்த இரு அணிகளும் 20 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 10 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு ஆட்டங்கள் ‘டை’யில் முடிந்துள்ளன.