குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் – தமிழக முதல்வர் பழனிசாமி .
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை (நேற்று) உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இதுபற்றி குடியரசு துணைத் தலைவரின் ட்விட்டர் பக்கத்தில் கூறிருப்பதாவது : குடியரசு துணைத் தலைவர் வழக்கமாக மேற்கொள்ளும் கரோனா பரிசோதனையை இன்று காலை மேற்கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனினும், அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. நல்ல உடல்நலத்துடனே இருக்கிறார். வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அவரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவி உஷா நாயுடுவுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் தனிமையில் உள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிருப்பதாவது : கரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.