இந்தியா

காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேலுக்கு கரோனா தொற்று உறுதி!

காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , ‘எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக என்னோடு தொடர்பில் இருந்த அனைவரையும் சுய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கிக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

மாநிலங்களவை எம்.பியான அகமது படேல் சமீபத்தில் நிறைவடைந்த மக்களவை கூட்டத் தொடரில் கலந்து கொண்டு, மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தீவிரமாக வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.