விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி : செரீனா வில்லியம்ஸ் விலகல் !

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றிருந்த செரீனா வில்லியம்ஸ், 2-ஆவது சுற்றில் பல்கேரியாவின் ஸ்வெட்டானா பைரன்கோவாவை சந்திக்கவிருந்த நிலையில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், இந்த முறை பிரெஞ்சு ஓபனை வெல்லும்பட்சத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் (24) வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் , திடீரென காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது .