Covid19

புதுவையில் புதிதாக 514 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 514 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் காரோண வைரஸ் பாதிப்பால் பலியாகியுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 4,653 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 435, காரைக்கால் 57, ஏனாம் 13, மாஹே 9 என மொத்தம் 514 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 28,534 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 1,817 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 3 ,237 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரியில் 5, காரைக்காலில் ஒருவர், ஏனாமில் ஒருவர் என 7 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 532 (1.86 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே 443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22,948 (80.42 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது