இந்தியா

மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த நாள் – குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

மகாத்மா காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 151ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் : காந்தியடிகள் வாழ்க்கை, உன்னத எண்ணங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. வளமான, அன்பான இந்தியாவை உருவாக்குவதில் காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

இதுகுறித்து குடியரத் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் : காந்தியின் பிறந்த நாளில் தேசநலம், முன்னேற்றத்திற்கு நம்மை அர்ப்பணித்து உண்மை, அகிம்சை வழியை பின்பற்றுவோம்.காந்தியடிகளின் அன்பு, உண்மை, அகிம்சை உலக நலனுக்கு வழி வகுக்கின்றது.தூய்மையான, திறமையான, வலுவான, வளமான இந்தியாவை உருவாக்கி காந்தியின் கனவுகளை நனவாக்குவோம். என குறிப்பிட்டுள்ளார்.