எனது நண்பர் ‘அதிபர் டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டும்’ – பிரதமர் மோடி
அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருவரும் தனிமைப்படுத்துக்கொண்டு கரோனா சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ”எனது நண்பர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி கரோனாவிலிருந்து குணமடைந்து விரைவில் ஆரோக்கியத்துடன் திரும்ப வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.