உலகம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா தொற்று உறுதி…

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனக்கும், தனது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் .

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, ட்ரம்புக்கும் அவரது மனைவி மெலனியா ட்ரம்புக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிறிய இடைவெளி ஓய்வு கூட எடுத்துக்கொள்ளாமல் அயராமல் உழைத்து வந்த தனது ஆலோசகர் ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருந்ததாக ட்ரம்ப் தெரிவித்த சிறிது நேரத்தில், தனக்கும் தனது மனைவி மெலனியா ட்ரம்புக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதை தெரிவித்துள்ளார்.

உடனடியாக குணமடைவதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும், இணைந்தே நோயைக் கடப்போம் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.