Covid19அரசியல்

உடல்நிலை சீராக உள்ளதால் விஜயகாந்த், பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ்

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில்,
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது இருவருக்கும் உடல் நலம் நன்கு தேறிவருவதாகவும், இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.