மகாத்மா காந்தியின் 80 அடி உயர பிரமாண்ட ஓவியம்; சென்னை சென்ட்ரலில் திறப்பு
மகாத்மா காந்தியின், 151-வது பிறந்த நாளை நினைவு கூரும் விதமாக, சென்ட்ரல் ரயில் நிலைய சுவரில், வரையப்பட்ட அவரது பிரமாண்ட ஓவியம், திறந்து வைக்கப்பட்டது.
‘துாய்மை இந்தியா’ திட்டத்தில், சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், செப்., 16 முதல் 30ம் தேதி வரை, துாய்மை வாரம் கொண்டாடப்பட்டது.நிறைவு நிகழ்ச்சியையொட்டி, காந்தியடிகள் மேற்கொண்ட ரயில் பயண நிகழ்வு ஒன்றை, சுவர் ஓவியமாக வரைய, சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டது. ‘ரெனால்ட் நிசான்’ மற்றும் வர்த்தக பிரிவுடன் இணைந்து, சென்ட்ரல் மூர் மார்க்கெட் புறநகர் மின்சார ரயில் நிலைய கட்டடத்தின் கிழக்கு பக்க சுவரில், 80 அடி உயர முள்ள காந்தியின் அழகிய பிரமாண்ட ஓவியம் வரையப்பட்டது.
காந்தி யின், 151-வது பிறந்த நாளை நினைவு கூரும் விதமாக, இந்த ஓவியம் , திறந்து வைக்கப்பட்டது.இந்த ஓவியத்தை முதன் முதலில் உருவாக்கியவர், தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்த ஓவியர் சங்கரலிங்கம். தற்போது, இந்த ஓவியம், நாட்டின் பல்வேறு இடங்களில் வரையப்பட்டு, அற்புத படைப்பாக திகழ்ந்து வருகிறது .