உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு விதிமுறையுடன் துர்கா பூஜை கொண்டாட்டத்திற்கு அனுமதி
உ.பி.,யில் துர்கா பூஜை கொண்டாட்டங்களை எளிமையான முறையில் பாதுகாப்பு நடவடிக்கையுடன் கொண்டாட முதல்வர் யோகி அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது . ஊரடங்குகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பாதுகாப்பு விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது .
இந்நிலையில் தொற்று பாதிப்புக்கு மத்தியில், துர்கா பூஜை கொண்டாட்டங்களை அரசு வழிகாட்டுதலின்படி, பாதுகாப்பு நெறிமுறைகளுடன் எளிமையான முறையில் கொண்டாட உ.பி.,மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
திறந்த வெளி அல்லாமல், மூடப்பட்ட / குறுகிய இடங்களில் பண்டிகையை கொண்டாட அரசு தடை விதித்துள்ளது. துர்கா பூஜை கொண்டாடப்படும் மண்டபத்தில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 200 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். துர்கா பூஜை பண்டிகை கொண்டாடப்படும் நவராத்திரி விழா அக்-17 முதல் துவங்குகிறது. அரசின் வழிகாட்டுதல் அக்-15 முதல் நடைமுறைக்கு வரும். துர்கா பூஜைக்கான அனுமதி கிடைத்தது, பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் திரை அரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ்கள் அக்-15 முதல் 50 சதவீத திறனுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். புதிய வழிகாட்டுதலின் கீழ், உ.பி., அரசு அனைத்து பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் அக்-15 முதல் ஒரு கட்டமாக வகுப்புகளை நடத்தத் தொடங்கலாம் எனவும் . ஆன்லைன் வகுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் . உண்மையில், பெற்றோரின் அனுமதி இன்றி எந்தவொரு குழந்தையும் உடல் ரீதியாக வகுப்புகளில் கலந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்த முடியாது என உ.பி அரசு அறிவித்துள்ளது.