தமிழ்நாடு

குவைத் மன்னர் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து துறை தலைவர்கள், டி.ஜி.பி.மற்றும் காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத்திற்கு கடந்த ஜூலை மாதம் திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குவைத்திலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி அவர் மரணம் அடைந்தார்.

இந்நிலையில் மறைந்த குவைத் மன்னருக்கு தமிழக அரசு சார்பில் நாளை ஒரு நாள் துக்கம் அனிசரிக்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், டி.ஜி.பி மற்றும் காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் அக்டோபர் 4 ஆம் தேதி அரசு அலுவலகங்களில் தேதியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க வேண்டும் எனவும், அரசு சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.