ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் சிங்கப்பூர் நிறுவனம் ரூ. 5,512.5 கோடி முதலீடு
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் சிங்கப்பூர் நிறுவனமான ஜிஐசி ரூ. 5512.5 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் ரிலையன்ஸின் 1.22 % பங்குகளை ஜிஐசி வாங்குகிறது. ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் அண்மைக்காலமாக பன்னாட்டு முதலீடுகள் வர தொடங்கியுள்ளன. ஜிஐசி முதலீடானது, ரிலையன்ஸ் ரீடெய்லில் ஆறாவது முதலீடாகும்.
இது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவிக்கையில், நீண்ட கால அனுபவங்களை கொண்ட ஜிஐசி நிறுவனத்தின் முதலீடு இந்திய சில்லறை வணிகத்தின் மதிப்பீடற்ற அங்கமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
ஜிஐசி நிறுவனத்தின் சிஇஓ லிம் சோ கியாட் தெரிவிக்கையில், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கும், முதலிட்டாளர்களுக்கும் திருப்தியளிக்கும் வகையில் விஸ்தாரமான அமைப்போடு செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் இதுவரை முதலீடுகள் மூலம் 6.87% பங்குகளை விற்றுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 30360 கோடியாகும். ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் நாடு முழுவதும், 12 ஆயிரம் ஸ்டோர்களுடன் இயங்கி வருஇவது குறிப்பிடத்தக்கது.