வணிகம்

(05-10-2020) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்…

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது.இதையடுத்து சென்னையில் நேற்று தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.38,952-க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.4,850-க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,802-க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.38,416-க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.6,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.