அரசியல்தமிழ்நாடு

அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை என மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக செயற்குழுவில் பல்வேறு விவாதங்கள் நடந்தன. தேர்தல் வரும் நேரத்தில், என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்.யார் முதல்வர் என்று கேள்வி அங்கு எழவில்லை. அதிமுகவில் பிரச்சினையில்லை என தெரிவித்தார் .

வெளியில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு உள்ளது என்றும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை தனது டுவீட்டர் பதிவில் தமிழக துணை முதல்வர் தெரிவித்துள்ளார் .

அதிமுகவில் பிரச்சினையே இல்லை. அரசு சிறப்பாக செயல்பட துணை முதல்வர் துணையாக இருக்கிறார் என்று தெரிவித்தார் .அவர் துணை முதல்வர் மட்டுமல்ல அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமாக உள்ளார். அவரை கட்சி நிர்வாகிகள் சென்று சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். அவர் பெரியகுளம் வந்திருக்கும் நேரத்தில் எளிதாக சென்று பார்க்கலாம் என கட்சி நிர்வாகிகள் சந்திப்பது வழக்கமான நடைமுறைதான். இதை அரசியலாக்கி பார்ப்பவர்களுக்கு அரசியலாகத் தெரியும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்