Covid19இந்தியா

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 66 லட்சத்தைக் கடந்தது .

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது: திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 74,442 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மொத்த கரோனா பாதிப்பு 66,23,816 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 903 போ் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 1,02,685 ஆக உயா்ந்துவிட்டது. கரோனாவில் இருந்து இதுவரை 55,86,704 போ் குணமடைந்துள்ளனா்.

நாட்டில் தற்போது 9,34,427 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி அக்டோபா் 4-ஆம் தேதி வரை 7,99,82,394 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 9,89,860 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தில் இருந்து 65 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

ஆகஸ்ட் 7-ஆம் தேதி 20 லட்சமாக இருந்த கரோனா பாதிப்பு ஆகஸ்ட் 23-இல் 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-இல் 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-இல் 50 லட்சமாகவும் இருந்தது. செப்டம்பா் 28-ஆம் தேதி மொத்த கரோனா பாதிப்பு 60 லட்சத்தைக் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.