அரசியல்இந்தியா

இன்று இரவுக்குள் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை – நிர்மலா சீதாராமன்

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இந்த ஆண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று (திங்கள்கிழமை) இரவுக்குள் வழங்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 42-ஆவது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது:

“நடப்பாண்டுக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் வரி ரூ. 20,000 கோடி இன்று இரவு மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் ஏற்கெனவே வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 24,000 கோடி அடுத்த வார இறுதிக்குள் மாநிலங்களுக்கு வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார் .