தமிழ்நாடு

அக்டோபர்-31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது – சென்னை மாநகராட்சி

அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும், மெரினா கடற்கரைக்கு அனுமதி மறுக்கப்படுவதில்லை.

அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணை ஒன்றின் போது மெரினா கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி எடுத்துள்ள முடிவு குறித்து வரும் அக்டோபர் 5-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டது.

இதன்படி, இந்த வழக்கில் இன்று பதிலளித்த சென்னை மாநகராட்சி அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என கூறியுள்ளது.