உலகம்

சிகிச்சைக்கு மத்தியில் காரில் வலம் வந்த அமெரிக்க அதிபர்…

காரோண வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் இன்று வெள்ளை மாளிகை திரும்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரோண வைரஸ் தொற்று காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிபர் டிரம்ப்க்கு மூச்சு விடுதலில் பிரச்னை எழுந்ததால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். டிரம்புக்கு ரெம்டெசிவர் 2வது டோஸும், டெக்ஸாமெத்தசோன் முதல் டோஸும் அளிக்கப்பட்டது. இதனால் பக்கவிளைவு எதுவும் தென்படவில்லை என்று அவருக்கு சிகிச்சையளித்து வரும் நுரையீரல் நிபுணர் தெரிவித்திருக்கிறார்.

டிரம்பின் உடல்நிலை நன்றாக இருப்பதால், அவர் இன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பக் கூடும் எனவும், அதன்பின் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் சிறப்பு மருத்துவர் கோன்லி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மருத்துவமனை முன் கூடியிருந்த தனது ஆதரவாளர்களை காண அதிபர் டிரம்ப் திடீரென காரில் புறப்பட்டுச் சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.