அரசியல்

அதிமுக அவைத் தலைவராக நானே நீடிப்பேன் அதில் எந்த மாற்றமும் இல்லை – மதுசூதனன்

அதிமுகவின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.

இன்று செய்தயாளர்களிடம் பேட்டியளித்த அவர், அதிமுகவின் அவைத் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன்; எந்த மாற்றமும் இல்லை. அதிமுகவின் பொதுக் குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.

அதிமுகவின் அவைத் தலைவர் பதவி எனக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொடுத்தது, நான் இருக்கும் வரை அதிமுக அவைத் தலைவரகவே இருப்பேன் என்று மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.

உடல்நிலை காரணமாக அதிமுக அவைத் தலைவர் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மதுசூதனன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.