உலகம்

ஆப்கானிஸ்தான் வெடிகுண்டு தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான் படையினர் நடத்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இதுதொடர்பாக தெற்கு ஹெல்ம்லாந்து மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளரான ஓமர் ஜ்வக் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தெற்கு ஹெல்ம்லாந்து மாகாணத்தின் கிரேஷ்க் மாவட்டம் யக்சல் பகுதியில் ராணுவ சோதனைச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இங்கு செவ்வாய் இரவு 11.30 மணியளவில் தலிபான் படையினர் கார் வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர் . இதில் நான்கு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த மூன்று பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார் .

இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் அதிகாரப்பூர்வமாக பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.