Covid19இந்தியா

ஒடிசாவில் புதிதாக 2,995 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,995 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,995 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,40,998-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 29,770 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கரோனாவிலிருந்து மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,10,217-ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 924 பேர் உயிரிழந்தனர்” என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.