உ.பி-யில் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் புடான் மாவட்டத்திலுள்ள ஹஸ்ரத்பூர் பகுதியில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 5 வயதுடைய சிறுமியை அவரது உறவினரே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
வீட்டிற்கு அருகே உள்ள பாழடைந்த கட்டடத்தில் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தப்பியோடிய குற்றவாளி உறவினரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.