இந்தியா

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் காவல்துறையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள சகுன் பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து (நேற்று) செவ்வாய் மாலை துவங்கி அந்தப் பகுதியில் காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

புதன் அதிகாலையில் பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் இடத்தை நெருங்கிய அவர்கள் சரணடைந்து விடுமாறு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் அதைக் கேட்காமல் நெருங்கி வந்த படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.