சிபிஐ முன்னாள் இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வானி குமார் சிம்லாவிலுள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டதாக சிம்லா காவல் துறை கண்காணிப்பாளர் மோஹித் சாவ்லா தெரிவித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனது ஆத்மா புதிய பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும், தனது உடலுக்கு எந்த சடங்குகளும் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். சிபிஐ இயக்குநராக அஸ்வனி குமார் இருந்த காலகட்டத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், சொராபுதீன் என்கவுன்டர் போன்ற முக்கிய வழக்குகளை கையாண்டார்.
அஸ்வானி குமார் 37 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு மற்றும் ஹிமாச்சலப் பிரதேச அரசுகளுக்காக பணியாற்றியுள்ளார். 1973-இல் ஐபிஎஸ்-இல் இணைந்த அவர் 2006 ஆகஸ்டில் ஹிமாச்சலப் பிரதேச காவல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அஸ்வானி குமார் நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .