பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு 3,16,934 ஆக அதிகரிப்பு
பாகிஸ்தானில் புதிதாக 583 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,16,934 ஆக அதிகரித்துள்ளது.
அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 6,544 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பெற்று இதுவரை 3,02,375 பேர் குணமடைந்துள்ளனர். 497 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 31,168 உள்பட இதுவரை 37,61,389 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் சிந்து முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து பஞ்சாப், கைபர்-பக்துன்க்வா மாகாணங்கள் இடம்பெற்றுள்ளன.