புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு…
புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தபடி, பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கைகள் சுந்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி ஏற்கெனவே தெளிக்கப்பட்டன.
இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் புதுவையில் இன்று முதல் மாணவர்கள் ஆசிரியர்களிடம் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் விதமாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
9 முதல் 12ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று 10 மற்றும் 12-ம் வகுப்புகளும், நாளை 9, 11-ம் வகுப்புகளும் திறக்கப்படுகின்றன. பள்ளிகளில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.