இந்தியா

உத்தரகாண்ட் முதல்வரின் புதிய சுய வேலைவாய்ப்பு திட்டம்

உத்தரகாண்டில் இளைஞர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சூரிய சுய வேலைவாய்ப்பு திட்டத்தை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தொடக்கி வைத்தார்.

கரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் பல்வேறு தரப்பினர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதனால் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை முதல்வர் திரிவேந்திர சிங் தொடக்கி தலைமைச் செயலகத்தில் வைத்துள்ளார்.

முதல்வரின் சூரிய சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகள் உருவாவதுடன் மட்டுமல்லாமல், பசுமை திட்டத்தின் கீழ் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையும் ஊக்குவிக்கப்படுகிறது.

முதல்வர் சூரிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உள்ள பயனாளர்களுக்கு முதல்வர் ஸ்வாலம்பன் யோஜனா திட்டத்தின் பலன்களும் கிடைக்கும் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.