மகாராஷ்டிரத்தில் புதிதாக 154 காவலர்களுக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 154 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட ஏராளமான முன்களப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவில் காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 154 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மொத்தமாக இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 24,735-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,394 காவலர்கள் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், 22,082 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2 காவலர்கள் உயிரிழந்ததால், கரோனாவால் மொத்தமாக உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 259-ஆக அதிகரித்துள்ளது.