இமாசல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் நிலநடுக்கம்
இமாசல பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இமாசல பிரதேசத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 2.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.
இதேபோன்று, மணிப்பூரின் காம்ஜோங் பகுதியில் இன்று அதிகாலை 3.12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி உள்ளது.
இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட பிற விவரங்கள் வெளியாகவில்லை.