இந்தியாவில் தொடர் உச்சத்தில் பிடிவாதமாய் நிற்கும் காரோண வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 69 லட்சம் கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 70,496 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 68 லட்சத்து 35 ஆயிரத்து 656 என்ற எண்ணிக்கையில் இருந்து 69 லட்சத்து 6 ஆயிரத்து 152 என்ற எண்ணிக்கையை அடைந்து உள்ளது. நாடு முழுவதும் 8,93,592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 59,06,070 ஆக உயர்ந்து உள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு 964 பேர் மரணமடைந்து உள்ளனர். இதனால், கொரோனா பாதிப்புகளுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 526ல் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரத்து 490 ஆக உயர்வடைந்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டோர் எண்ணிக்கை கடந்த 2 நாட்களில் 1 லட்சம் கடந்துள்ளது. மொத்த எண்ணிக்கை 69 லட்சம் என்ற அளவை கடந்திருக்கிறது.