உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு….
2020-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் (அக்.5 ), திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் நாள் மருத்துவத் துறைக்கும், இரண்டாம் நாள் இயற்பியல் துறைக்கும், மூன்றாம் நாள் வேதியியல் துறைக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், நான்காம் நாள் இலக்கியத்திற்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் 2020-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பசிப்பிணிப் போக்குதல் மற்றும் போரைத்தவிர்த்து அமைதியை காப்பதால் இந்த விருதுக்கு உலக உணவுத்திட்ட அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து 53 ஆண்டுகளாக 83 நாடுகளில் 9 கோடிப் பேருக்கு உணவு வழங்கி சேவையாற்றி வந்ததால் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.