அரசியல்உலகம்

விர்ச்சுவல் விவாத முறைக்கு அதிபர் டிரம்ப் மறுப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார விவாத நிகழ்ச்சி விர்ச்சுவல் முறையில் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அதில் பங்கேற்க மாட்டேன் என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிபர் டிரம்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் ஓரிரு நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர், தற்போது குணமடைந்து வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார். அவரை மருத்துவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இறுதிகட்ட பிரச்சாரமே பெருமளவு வெற்றி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால் டிரம்பால் பொது நிகழிச்சியில் உடனே பங்கேற்க முடியாது என்பதால் அவரது பிரச்சாரக் குழுவினர் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில், இரு கட்சி விவாத ஆணையம் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்கள் இடையே மூன்று விவாதங்களை நடத்தும். பிடன் உடனான முதல் விவாதத்தில் டிரம்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இன்னும் இரண்டு விவாத நிகழ்ச்சிகள் நேருக்கு நேர் நடைபெற வேண்டும்.

கொரோனா அச்சம் காரணமாக அதனை விர்ச்சுவல் முறையில் விவாத ஆணையம் மாற்றியுள்ளது.இந்நிலையில் இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. விர்ச்சுவல் விவாதத்தில் நான் பங்கேற்க மாட்டேன். பிடனை காப்பாற்றுவதற்காகவே இதனை இருகட்சி விவாத ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.” என டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார் .