குற்றம்

ஜார்கண்டில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது

ஜார்கண்டில் 17 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷெத்பூரில் தமது சக தோழனுடன் வந்த 17 வயது சிறுமியை கடந்த வியாழக்கிழமை 5 பேர் அடங்கிய மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர்.

கட்டாயப்படுத்தி காளியதி கெளசாலா பகுதிக்கு சிறுமியை கடத்திச் சென்ற அவர்கள், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

இதில் ஒருவன் சிறுவன் என்பதால், அவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர். மற்ற நான்கு பேரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.