டெல்லியில் இன்று புதிதாக 2,866 பேருக்கு கரோனா தொற்று உறுதி
டெல்லியில் புதிதாக 2,866 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. அங்கு புதிதாக 2,866 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,06,559 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 48 பேர் பலியாகியுள்ளனர். 2,766 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,740 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 2,78,812 பேர் குணமடைந்துள்ளனர். 22,007 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் கடந்ச 24 மணி நேரத்தில் 49,736 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 35,74,666 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
அங்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 8.58 சதவிகிதமாக உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் விகிதம் 1.87 சதவிகிதமாக உள்ளது.