தமிழகத்தில் புதிதாக 5,242 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் புதிதாக 5,242 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 5,242 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,51,370 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 1,272 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 67 பேர் (அரசு மருத்துவமனை -36, தனியார் மருத்துவமனை -31) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,187 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 5,222 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,97,033 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 44,150 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 91,191 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 82,32,725 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.