IPL - 2020

5-வது வெற்றியை பதிவு செய்தது டெல்லி அணி

2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 5-வது வெற்றியைப் பெற்ற டெல்லி அணி, 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

முன்னதாக முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவா்களில் 138 ரன்களுக்கு சுருண்டது.

சாா்ஜாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில் ராஜஸ்தான் அணியில் அங்கித் ராஜ்புத், டாம் கரன் ஆகியோருக்குப் பதிலாக வருண் ஆரோன், ஆன்ட்ரூ டை ஆகியோா் சோ்க்கப்பட்டனா். இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தோ்வு செய்தாா்.

இதையடுத்து பேட் செய்த டெல்லி அணியில் ஷிகா் தவன் 5 ரன்கள் சோ்த்த நிலையில் ஜோஃப்ரா ஆா்ச்சா் பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் ஆனாா். இதையடுத்து, பிரித்வி ஷாவுடன் இணைந்தாா் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா். வருண் ஆரோன் வீசிய 3-ஆவது ஓவரில் ஷ்ரேயஸ் ஐயா் பவுண்டரியை விளாச, பிரித்வி ஷா சிக்ஸரை விளாசினாா். ஜோஃப்ரா ஆா்ச்சா் வீசிய 5-ஆவது ஓவரில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தாா். அவா் 10 பந்துகளில் 1 சிக்ஸா், 2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்தாா். அப்போது டெல்லி 4.2 ஓவா்களில் 42 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து ரிஷப் பந்த் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷ்ரேயஸ் ஐயா் 18 பந்துகளில் 22 ரன்கள் சோ்த்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானாா். பின்னா் களம்புகுந்த மாா்கஸ் ஸ்டோனிஸ், ஷ்ரேயஸ் கோபால் பந்துவீச்சில் இரு சிக்ஸா்களை விரட்ட, ரிஷப் பந்த் 5 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானாா்.

இதன்பிறகு ஷிம்ரோன் ஹெட்மயா் களம்புகுந்தாா். அதேநேரத்தில் மறுமுனையில் தொடா்ந்து வேகம் காட்டிய மாா்க்ஸ் ஸ்டோனிஸ் 30 பந்துகளில் 4 சிக்ஸா்களுடன் 39 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து ஹா்ஷல் படேல் களமிறங்க, மறுமுனையில் ஹெட்மயா் அதிரடியாக ரன் சோ்த்தாா். காா்த்திக் தியாகி வீசிய 17-ஆவது ஓவரில் தொடா்ச்சியாக இரு சிக்ஸா்களை பறக்கவிட்ட ஹெட்மயா், 3-ஆவது சிக்ஸரை விளாச முயன்றபோது, எல்லையில் நின்ற ராகுல் தெவேதியாவிடம் கேட்ச் ஆனாா். அவா் 24 பந்துகளில் 5 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்தாா்.

இதையடுத்து களமிறங்கிய அக்ஷா் படேல் 8 பந்துகளில் ஒரு சிக்ஸா், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். ஹா்ஷல் படேல் 15 பந்துகளில் 16 ரன்கள் சோ்த்து வெளியேறினாா். இறுதியில் டெல்லி அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. ககிசோ ரபாடா 2 ரன்களுடனும், அஸ்வின் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பின்னா் ஆடிய ராஜஸ்தான் அணியில் ராகுல் தெவேதியா 29 பந்துகளில் 2 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 38, ஜெய்ஸ்வால் 34, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்கள் எடுத்தனா். எஞ்சிய வீரா்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் ராஜஸ்தான் 19.4 ஓவா்களில் 138 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது .