தமிழ்நாடு

டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து தற்கொலை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பி. முத்து. டிக்டாக் செயலியில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர். டிக்டாக் வீடியோக்களால் பலரை ரசிக்க வைத்த இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எனினும் இவரது நடவடிக்கைகளால் குடும்பத்திற்குள் விவகாரம் ஏற்பட்டு உள்ளது. மரக்கடை ஒன்றுக்கு சொந்தக்காரராக இருக்கும் இவர் கடையில் வேலை பார்க்காமல் இருந்துள்ளார்.

எந்நேரமும் டிக்டாக்கில் இருந்ததற்காக இவரின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அவரே வீடியோ பதிவு செய்து வெளியிட்டார். குறிப்பிட்ட சாதிக்கு எதிராக வீடியோ வெளியிட்டதற்காக இவர் மீது முதல் அமைச்சரின் தனி பிரிவுக்கு புகாரும் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளதென்று, சீனாவை அடிப்படையாக கொண்ட டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை மத்திய அரசு தடை செய்த பின்னர் அவர் வருத்தமுடன் இருந்துள்ளார். இந்த நிலையில், டிக்டாக் வீடியோக்களால் பிரபலம் அடைந்த ஜி.பி. முத்து தீராத வயிற்று வலியால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.