ஒடிசாவில் புதிதாக 2,546 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி
ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,546 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,546 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,52,239-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 26,891 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2,24,273 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) 45,079 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்தமாக 55 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,022-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.