தமிழ்நாடு

தஞ்சாவூர் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 (ஐ.டி.ஐ) மாணவர்கள் மாயம்…

தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களைத் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள மானோஜிபட்டி தெற்கு பூக்கொல்லை ராஜகுரு நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நித்தீஷ் (19), மானோஜிபட்டி ராஜராஜன் நகரைச் சேர்ந்த செல்லதுரை மகன் ஹரிகரன் (18) ஆகிய இருவரும் தஞ்சாவூரிலுள்ள அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) படித்து வருகின்றனர். இருவரும் தனது நண்பர்களுடன் மானோஜிபட்டி பகுதியில் உள்ள கல்லணைக் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்கச் சென்றனர்.

ஆற்றில் 7 பேர் குளித்துக் கொண்டிருந்த நிலையில், நீரோட்டம் வேகமாக இருந்ததால் ரித்தீஷ், ஹரிகரன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரையும் தேடினர். இரவு நேரமாகிவிட்டதால் இருவரையும் தேட முடியவில்லை. எனவே, இன்றும் (திங்கள்கிழமை) மீண்டும் தேடுதல் பணியில் தீயணைப்பு வீரர்கள் உள்ளனர்.