இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் கார்ல்டன் சேப்மன் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 49.
1990களில் கார்ல்டன் சேப்மன் – பாய்சுங் பூட்டியா – ஐ.எம். விஜயன் ஆகிய மூவரும் கூட்டணி அமைத்து அடித்த கோல்களும் விளையாடிய ஆட்டங்களும் ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றவை.
இந்திய அணிக்காக 1995 முதல் 2001 வரை விளையாடினார் கார்ல்டன். இவருடைய தலைமையில் 1997 எஸ்.ஏ.எஃப்.எஃப் கோப்பையை இந்திய அணி வென்றது. ஈஸ்ட் பெங்கால், ஜேசிடி மில்ஸ் கிளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். 2001-ல் ஓய்வு அறிவிப்பை இவர் வெளியிட்டார். இதன்பிறகு பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
இந்நிலையில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்ல்டன் இன்று காலமானார். கார்ல்டன் சேப்மனின் மறைவுக்கு வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.