வணிகம்

(13-10-2020) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது தங்கத்தின் விலை குறைந்து தற்போது ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.19 குறைந்து ரூ.4,865-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு 1.10 காசுகள் குறைந்து, ரூ.66-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.66,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.