Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை (4,879) விட குறைவாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,65,930 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 191 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-125) மூலமாக, இன்று மட்டும் 85,509 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 84 லட்சத்து 88 ஆயிரத்து 503 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,834 பேர் ஆண்கள், 1,832 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,02,216 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,63,682 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது.

இன்று மட்டும் 5,117 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 320 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 57 பேர் உயிரிழந்தனர். அதில், 19 பேர் தனியார் மருத்துவமனையிலும், 38 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இது நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை (62) விட குறைவாகும். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,371 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 43,239 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.