இந்திய பங்குச்சந்தை நிலவரம்
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகமாக வர்த்தகமாகிறது. ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தைகள் சற்றுநேரத்தில் மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பியுள்ளன .
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 12 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 4 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகின. சற்றுநேரத்தில் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச்சந்தைகள் சரிந்தன. இருப்பினும் மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பின.
ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமான போதிலும் பார்தி ஏர்டெல், ஐடிசி., ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, கோட்டெக் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்ந்ததாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் காணப்பட்டன.