(14-10-2020) இந்திய பங்குச்சந்தை நிலவரம்
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக உயர்வுடன் வர்த்தகமான நிலையில் இன்று(அக் -14) சரிவை சந்தித்தன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 214 புள்ளிகள் சரிந்து 40,410.57ஆகவும், நிப்டி 77.05 புள்ளிகள் சரிந்து 11,857.45ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து காலை 11.15மணியளவில் சென்செக்ஸ் 300, நிப்டி 100 புள்ளிகளுக்கு அதிகமாகவும் சரிந்து வர்த்தகத்தை தொடர்ந்தன.
ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ உள்ளிட்ட ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும், முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததாலும் இன்றைய வர்த்தகம் வர்த்தகம் சரிவை சந்தித்தன.
இன்றைய வர்த்தகத்தில் அநேக நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக ஓஎன்ஜிசி நிறுவன பங்குகள் 3 சதவீதம் சரிந்தன. இவை தவிர்த்து என்டிபிசி, பவர்கிரிட்டு, அல்ட்ரா டெக், ஐடிசி., எச்டிஎப்சி, ஐசிஐசிஐ., டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஹெச்சிஎல் போன்ற நிறுவன பங்குகளும் சரிந்து காணப்பட்டன.
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.73.45ஆக வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 0.28 சதவீதம் சரிந்து 42.33 அமெரிக்க டாலராக விற்பனையானது.