தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி விதித்த சொத்து வரிக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

கொரோனா பொதுமுடக்கம் காரணாமாக கடந்த 6 மாத காலமாக தமிழகம் முழுவதும் பொழுதுபோக்கு இடங்கள், திருமண மண்டபங்கள் மூடப்பட்டு இருந்தன. தற்போது தான் தளர்வுகள் அடிப்படையில் திருமண மண்டபங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி கோரியுள்ளது. ஆனால் ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கத்தால் மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாக இருந்ததால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தாக்கல் செய்த மனுவில், சென்னை மாநகராட்சிக்கு கடந்த 23ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியும் இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தரப்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் இன்று விசாரிக்கிறார்.

முன்னதாக ரஜினி தனது ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா பேரிடர் காலத்தில் பயன்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.