தமிழ்நாடு

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் . தேனி, தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் . விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தென்தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் கீழக்கரை வரை கடல் சீற்றமாக காணப்படும்.

அடுத்த 2 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.