நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா
உலகின் முன்னணி கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டனான ரொனால்டோ, தற்போது ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான தேசிய லீக் தொடரில் பங்கேற்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் அவருக்கு நடத்தபட்ட கொரோனா சோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.

எந்த வித அறிகுறியும் இல்லாததால் தன்னை தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக போர்ச்சுக்கல் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து சுவீடன் அணிக்கு எதிராக மோத உள்ள போர்ச்சுக்கல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கப்பட்டுள்ளார். இதற்கு முன், ரொனால்டோ சக போர்ச்சுகல் வீரர்களுடன் இணைந்து சாப்பிட்டார். இதனால் மற்ற வீரர்களும் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.